World

ரொனால்டோவுக்கு வெள்ளை மாளிகையில் இரவு விருந்து

அமெரிக்கா சென்றுள்ள சவூதி இளவரசர் முகமது பின் சல்மான், கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ உள்ளிட்டோருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இரவு விருந்தளித்தார்.

ரியாத் மற்றும் வாஷிங்டன் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமெரிக்கா சென்றுள்ள சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சிறப்பான வரவேற்பு அளித்தார்.

நேற்று (18) இரவு நடைபெற்ற மிகப் பிரமாண்டமான விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், ஆப்பிள் தலைமைச் செயல் இயக்குநர் டிம் குக் உள்ளிட்ட உலகில் உள்ள மிகப்பெரிய தொழிலதிபர்கள், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அவர்களைத் தவிர்த்து ஃபிஃபா தலைவர் கியானி இன்பான்டினோ, செவ்ரான் தலைமை நிர்வாகி மைக் விர்த், பிளாக்ஸ்டோன் இணை நிறுவனர் ஸ்டீபன் ஸ்வார்ஸ்மேன், ஜெனரல் மோட்டார்ஸ் தலைமை நிர்வாகி மேரி பார்ரா, ஃபோர்ட் உந்துருளி நிர்வாகத் தலைவர் வில்லியம் கிளே ஃபோர்ட் ஜூனியர், டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் உள்ளிட்டோரும் இந்த விருந்தில் கலந்துகொண்டனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading