Local

லிஃப்ட் இடிந்து விழுந்ததில் முன்னாள் அமைச்சர் பலி சாரதி படுகாயம்!

முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியா் பி.எம்.பி. சிரில் காலமானார்.

தனது வீட்டின் மூன்றாவது மாடிக்கு சென்று கொண்டிருந்த போது லிஃப்ட் இடிந்து விழுந்ததில் பலத்த காயம் அடைந்த அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

தமது 89 ஆவது வயதிலேயே அவா் இவ்வாறு உயிாிழந்தாா்.

விபத்தில் காயமடைந்த சிரிலின் சாரதியும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீட்டின் வெளியே பொருத்தப்பட்டுள்ள லிஃப்ட் மூலம் மூன்றாவது மாடியில் பழுதுபார்க்கும் பணியை பார்வையிடுவதற்காக வைத்தியா் சிரில் தனது சாரதியுடன் பயணித்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading