Local

வங்கிக் கடனை குறைக்க அரசாங்கம் தீர்மானம்!

கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் வழமைக்கு திரும்பியவுடன் உடனடியாக வங்கி கடனை நூற்றுக்கு 7 வீதம் வரை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வர்த்தகர்கள் சிலரிடம் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வங்கி வட்டியும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் வர்த்தகம் செய்து வருடம் நிறைவடைந்த பின்னரே நட்டம் என்பது தெரியும். நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் 28 வீத வட்டி அறவிடப்பட்டது. நூற்றுக்கு 25 – 20 வீதம் வட்டி அறவிட்டு அபிவிருத்தியடைந்த நாடு ஒன்று உலகில் இல்லை.
Double digit interest rate என்ற இரட்டை இலக்க வட்டி தற்போது நீக்கப்பட்டு,“Single digit interest rate lending என்ற ஓரிலக்க வட்டியே தற்போது உள்ளது. இன்னும் ஓரளவு பொருளாதார வளர்ச்சியடைந்தவுடன் வங்கி வட்டியை 7 வீதமாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்னறது.
சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இற்த ஓரிலக்க வரியே உள்ளது. அதற்கமைய மேலும் வட்டியை குறைப்பதற்கே எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading