உலகலாவிய ரீதியில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிப்பு!






சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8.96 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 8,96,421 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் 2,74,79,194 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,95,73,079 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 60,342 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
