Lead NewsLocal

வடக்கின் மாவட்ட அரச அதிபர்களுக்கு கூண்டோடு இடமாற்றம்! – கோட்டா அரசு அதிரடி

வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட அரச அதிபர்களும் கோட்டாபய அரசால் கூண்டோடு இடமாற்றம் செய்யப்படுகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் இந்த இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரியவருகின்றது.

வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களின் அரச அதிபர்கள் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட அரச அதிபர் சிங்களவர். இந்தநிலையில், எஞ்சிய மூன்று மூன்று மாவட்ட அரச அதிபர்களையும் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் இடமாற்றம் செய்வதற்கு அமைச்சரவைப் பத்திரம் வழங்கப்பட்டு அதற்கு அனுமதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பைச் சேர்ந்த மகேஸ் யாழ்ப்பாண மாவட்டத்துக்கும், மட்டக்களப்பைச் சேர்ந்த அமலநாதன் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும், வவுனியாவைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் மன்னார் மாவட்டத்துக்கும் மாற்றப்படவுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தின் தற்போதைய அரச அதிபருக்கு எதிர்வரும் ஜூலை மாதம் வரையிலேயே சேவைக்காலம். அதற்குள் அவரை மாற்ற வேண்டாம் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்த போதிலும் அது நிராகரிக்கப்பட்டது. அதேநேரம் எதிர்வரும் மே மாதத்துடன் சேவை நிறுவுறும் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தற்போதைய அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸால் அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading