World

வறுமையின் காரணமாக தனது இருதயத்தை விற்கத் தயாராகும் தாய்!

இந்திய மாநிலம் கேரளாவின் மலப்புரம் பகுதியை சேர்ந்த சாந்தியிற்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.
கணவர் கைவிட்டு சென்ற நிலையில், தமது ஐந்து பிள்ளைகளின் சிகிச்சைக்காக போராடி வருகின்றார்.
பிள்ளைகளின் சிகிச்சைக்காகவே குடியிருப்பையும் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
வாடகைக்கு குடியிருந்த நிலையில், தற்போது வாடகை செலுத்தவும் வசதி இல்லை என்கிறார்.
மேலும் சொந்தமாக குடியிருப்பு இல்லாத நிலையில், தமது பிள்ளைகளுடன் அவர் தற்போது தெருவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதுவரை சிகிச்சைக்காக மட்டும் கடன் வாங்கியது 5 லட்சம் ரூபாய் என கூறும் சாந்தி, பொருளாதார ரீதியாக இதுவரை உதவியவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், தமது பிள்ளைகளுக்காக இருதயம் வரை விற்க தாம் தயாராக இருப்பதாக சாந்தி தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் விவாதமான நிலையில், அரசாங்க அதிகாரிகள் தலையிட்டு சாந்தியும் குடும்பத்தையும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளனர்.
மட்டுமின்றி, சாந்தியின் கோரிக்கையை ஆய்வு செய்து போதிய உதவி செய்யப்படும் என எம்.எல்.ஏ ஒருவர் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading