LocalNorth

வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு பூ மழை பொழிந்த உலங்கு வானூர்தி!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயப் பொங்கல் விழா நேற்று இடம்பெற்றபோது விமானப் படையினர் உலங்கு வானூர்தி மூலம் பூச்சொரிந்து வழிபட்டனர்.

இதேவேளை, இராணுவத் தளபதியும் கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா பலத்த பாதுகாப்புடன் திடீரென ஆலயத்துக்கு வருகை தந்து வழிபாடுகளில் கலந்துகொண்டார்.

வேட்டி அணிந்து வந்த அவர், தனது வருகை நினைவாக மரக்கன்று ஒன்றையும் அங்கு நட்டு வைத்தார்.

அதனைத் தொடர்ந்து வறிய குடும்பங்கள் சிலருக்கான உதவிப் பொருட்களும் அவரால் வழங்கிவைக்கப்பட்டன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading