வாகன இறக்குமதிக்கு 450 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் பத்திரங்கள் திறப்பு –
மத்திய வங்கி ஆளுநர் தகவல்
வாகன இறக்குமதிக்காக சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் பத்திரங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை (மே 22, 2025) மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வாகனங்கள் ஏற்கனவே நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வரை ஒதுக்கீடு செய்ய எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

You must be logged in to post a comment.