‘வாழ்க்கை முடிந்துவிட்டது, விடைபெறுகினறேன் இறைவா’- நீர்த்தேக்கத்தில் பாய்ந்து இளைஞன் தற்கொலை
தலவாக்கலை சுமன சிங்கள மகா வித்தியாலத்திற்கு அருகாமையில் இன்று (16) மாலை 3.30 மணியளவில் இளைஞர் ஒருவர் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நானுஓயா சமர்செட் பகுதியை சேர்ந்த எம். கிலின்டன் எலஸ்ட் எனும் வயது 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
திடீர் என நீர்தேகத்தில் பாய்வதனை கண்ட பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்ததனை தொடர்ந்து, பொலிஸார் மற்றும் கடற்படையினர் சடலத்தினை சுமார் 4.30 மணியளவில் மீட்டனர்.
நீர்தேகத்தில் பாய்வதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்பு குறித்த இளைஞன் செல்பி புகைப்படம் எடுத்து அதை தனது முகப்புத்தகத்தில் “END OF MY LIFE GOOD BYE GOD” என பதிவிட்டுள்ளார்.
காதல் விவகாரம் காரணமாக இவர் தற்கொiலை முயற்சியில் ஈடுப்பட்டாரா அல்லது வேறு எதுவும் காரணம் உண்டா என தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
க.கிசாந்தன்
