CinemaLocal

விஜய்க்கு வில்லனாகும் தோனி!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். திரைப்பிரபலங்கள் பலர் இணைந்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக ‘தளபதி 68’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 -ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் வில்லன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘தளபதி 68’ திரைப்படத்தில் வில்லனாக கிரிக்கெட் வீரர் தோனி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading