Local

விண்வெளி வீரரின் கெமராவில் சிக்கிய இலங்கை..!!

விண்வெளியில் இருந்து பார்க்கும்போது நம் இலங்கைத் தீவு எவ்வளவு அழகாகத் தெரிகிறது தெரியுமா? சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றி வரும் நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் , விண்வெளியில் இருந்து இலங்கையின் பிரமிக்க வைக்கும் புகைப்படம் ஒன்றைப் படம்பிடித்து தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் புகைப்படத்தில், நீல நிற இந்தியப் பெருங்கடலால் சூழப்பட்ட நம் இலங்கைத் தீவின் முழு வடிவமும், அதன் அழகிய கடற்கரைப் பகுதிகளும் மிகத் தெளிவாகவும் கண்ணைக் கவரும் வகையிலும் காட்சியளிக்கின்றன. சுமார் 400 கிலோமீட்டர் உயரத்தில் மணிக்கு 28,000 கிலோமீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த அரிய காட்சி, தற்போது சமூக வலைத்தளங்களில் இலங்கையர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனன், நாசாவின் விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விண்வெளி ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளி வீரரின் கமெராவில் நம் தாய்நாடு இவ்வளவு அழகாகப் பதிவாகியிருப்பது கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading