Local

விபச்சார விடுதியில் சிக்கிய குடும்ப பெண்கள் !

கேகாலை – வரக்காப்பொல நகரத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு பெண்கள் கைதுசெய்யப்பட்டதாக வரக்காப்பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வரக்காப்பொல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விபச்சார விடுதியில் சிக்கிய குடும்ப பெண்கள் ! | Family Women Trapped In Brothel

42 மற்றும் 36 வயதுடைய பெண்கள்

கைதுசெய்யப்பட்டவர்கள் பிலியந்தலை மற்றும் ஹசலக்க ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 42 மற்றும் 36 வயதுடைய பெண்கள் ஆவர்.

சந்தேக நபர்கள் வரக்காப்பொல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டதுடன் வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading