Local

விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு!

வரகாபொல, துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி ஒன்றும் மற்றும் அரச பேருந்து ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, இன்று காலை 11 மணியளவில் காலி – பூஸ்ஸ – ரில்லம்ப புகையிரத கடவையில் முச்சக்கர வண்டியொன்று புகையிரதத்துடன் மோதியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

புகையிரத கடவையில் வீதி சமிக்ஞை விளக்குகள் ஔிர்ந்த போது முச்சக்கரவண்டி புகையிரத பாதையை கடக்க முற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெலியத்தவிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த புகையிரதம் குறித்த முச்சக்கரவண்டியில் மோதியுள்ள நிலையில அதில் பயணித்த 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading