Uncategorized

விருது வழங்கும் விழாவில் தடுக்கி விழுந்த பிரபல நடிகை!

லோஸ் ஏஞ்சல்ஸில் நடந்த விருது வழங்கும் மேடையில் நடிகை ஒருவர் தடுக்கி விழுந்த சம்பவம் ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 29வது ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்டு விருதுகள் விழாவில் ஹாலிவுட் நடிகை ஜெசிகா சேஸ்டைன் (45) பங்கேற்றார். விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இவர், அதனை பெறுவதற்காக மேடையில் ஏறிய போது, திடீரென அவரது உடை சிக்கியதால் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். அங்கிருந்த ஒருவர் அவரை கைத்தாங்கலாக பிடித்து காப்பாற்றினார்.

அதன்பின் மேடைக்கு சென்று தனக்கான விருதை பெற்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஜெசிகா சேஸ்டைன் கூறுகையில், ‘ஜார்ஜ் அண்ட் டாமி என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த பெண் நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. விருதை பெறுவதற்காக மேடைக்குச் சென்றபோது, திடீரென நான் அணிந்திருந்த கவுன் கால்களில் சிக்கி கீழே விழுந்தேன். இப்படி நடக்கும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அப்போது அங்கிருந்த நண்பர்கள் எனக்கு உதவினர். அவர்களுக்கு நன்றி’ என்று கூறினார்….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading