World

விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தம்…!!!

போரை முடிவுக்கு கொண்டு வரும் 14 அம்ச ஒப்பந்தத்தில், அமெரிக்கா மற்றும் ஈரான் விரைவில் கையெழுத்திடுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்காசிய நாடான ஈரான் மீதான போர் இரண்டு மாதங்களைக் கடந்துள்ளது. தற்போது தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது.

விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு! | Possibility Of Signing Ceasefire Deal Soon

இரு தரப்பிடையே மோதலை கைவிடுவது குறித்து பேச்சுகள் நடந்து வருகின்றன.

இதையடுத்து, அமெரிக்க அமைதி பேச்சு குழுவை சேர்ந்த ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரெட் குஷ்னர் மற்றும் ஈரானிய அதிகாரிகளுக்கு இடையே நேரடியாகவும், மத்தியஸ்தர்கள் வாயிலாகவும் பேச்சு நடத்தப்பட்டு வந்தது.

இப்பேச்சின் பயனாக தற்போது இரு நாடுகளும் ஏற்றுக் கொள்ளும் வகையில் 14 அம்சங்கள் கொண்ட ஒரு பக்க ஒப்பந்தம் இரு தரப்பும் பரிசீலனை செய்தன.

இதைத் தொடர்ந்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாக கொண்ட ‘ஆக்ஸியோஸ்’ என்ற தனியார் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

விரைவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் அது கூறியுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading