World

தாக்குதலை நடத்துவோம் ; ட்ரம்பின் எச்சரிக்கையால் ஈரானுக்கு காத்திருக்கும் ஆபத்து

ஈரான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், எதிர்காலத்தில் இன்னும் கடினமாகவும், ஆக்ரோஷமாகவும் தாக்குதலை நடத்துவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானுடனான போர் குறித்து செய்தியாளர்களிடம் ட்ரம்ப் கூறியதாவது; நாங்கள் ஈரானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

ஆக்ரோஷமாகவும் தாக்குதலை நடத்துவோம் ; ட்ரம்பின் எச்சரிக்கையால் ஈரானுக்கு காத்திருக்கும் ஆபத்து | Danger Awaiting Iran After Trump S Warning

இன்று எங்களது 3 போர்க் கப்பல்களை வைத்து சில பெரிய இலக்குகளை குறிவைத்து தாக்கினோம். இதில், எங்களது கப்பல்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. அவர்களின் சில சிறிய படகுகளை அழித்தோம்.

ஈரானுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் முன்னேற்றம்: அதிபர் டிரம்ப் தகவல் ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க நாங்கள் ஒருபோதும் உரிமை வழங்க மாட்டோம். அதற்குக் அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அவர்கள் இதில் கையெழுத்திடத் தயாராக இருக்கிறார்களா என்று பார்ப்போம். பேச்சுவார்த்தைகள் நன்றாகச் சென்று கொண்டிருக்கின்றன. என்னை விட அவர்கள் தான் இதில் கையெழுத்திட அதிக ஆர்வமாக உள்ளனர்.

ஈரான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், எதிர்காலத்தில் இன்னும் கடினமாகவும், ஆக்ரோஷமாகவும் அவர்களை நாங்கள் வீழ்த்துவோம். நீங்கள் எதையும் விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.

ஏனெனில், ஈரானில் இருந்து ஒரு பெரிய தீப்பிழம்பு வெளிவருவதை மட்டும் நீங்கள் பார்ப்பீர்கள். எனவே அவர்கள் இந்த ஒப்பந்தத்தில் மிக வேகமாக கையெழுத்திடுவது அவர்களுக்கு நல்லது, இவ்வாறு அவர் கூறினார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading