Local

வீழ்ச்சியடைந்த அமெரிக்க டொலர்!

இலங்கையின் வர்த்தக வங்கிகளில் இன்று (10) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது.

மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே ரூ.312.39 இல் இருந்து ரூ.311.42 ஆகவும், ரூ.327.76 இல் இருந்து ரூ.326.74 ஆகவும் குறைந்துள்ளன.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.310.77 இல் இருந்து ரூ.309.78 ஆகவும், விற்பனை விலை ரூ.326 இல் இருந்து ரூ.325 ஆகவும் குறைந்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே ரூ.315 இல் இருந்து ரூ.314 ஆகவும், ரூ.327 இல் இருந்து ரூ.326 ஆகவும் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த சில நாட்களாக டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு பதிவாகி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading