Jobs

‘வெகுமதி பயணங்கள்’ மூலம் வாடிக்கையாளர் விசுவாசத்தைக் கொண்டாடும் பெஷன் பக்

 

இலங்கையின் முன்னணி பெஷன் Retail வர்த்தகநாமமான பெஷன் பக் (Fashion Bug), அதன் விசுவாசமான வாடிக்கையாளர்களை கௌரவிக்கும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு பரிசுகளை வழங்கும் மிகவும் எதிர்பார்ப்பு மிக்க, அதன் வருடாந்த பெஷன் பக் வெகுமதி திட்டமான, Rewards Getaway நிகழ்வை சிறப்பாக நிறைவு செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 14 பெஷன் பக் காட்சியறைகளிலும் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டத்தில், 50,000 இற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உற்சாகமான பங்கேற்பை வெளிப்படுத்தினர்.

இவ்வர்த்தகநாமத்தின் பயணத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களுக்கான நன்றிக்கடனாக அமையும் வகையில் வடிவமைக்கப்பட்ட பெஷன் பக் Rewards Getaway வாடிக்கையாளர் விசுவாச வெகுமதி திட்டமானது, அது இடம்பெற்ற காலப்பகுதி முழுவதும் புத்துணர்ச்சியூட்டும் வாழ்க்கை முறை சார்ந்த அனுபவத்தை வழங்கியது. இந்த திட்டமானது, அன்றாட ஷொப்பிங் அனுபவத்திற்கு ஒரு உற்சாகத்தை இணைத்ததுடன், ‘வாடிக்கையாளருக்கு முன்னுரிமை’ எனும் வர்த்தகநாமத்தின் கொள்கையை வலுப்படுத்தியது.

தெரிவு செய்யப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு சிறப்பு வாய்ந்த பொழுதுபோக்கு பயண பொதியை பெஷன் பக் ஏற்பாடு செய்திருந்தது. குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்களுக்கு, இவ்வர்த்தகநாமத்தின் தாரக மந்திரத்துடன் இணங்கும் வகையிலான உயர்தர வாழ்க்கை முறை அனுபவ பயணங்கள் பரிசாக வழங்கப்பட்டன. Cinnamon Life at City of Dreams இல் ஒரு நாள் தங்குதல், சொகுசு கப்பல் ஒன்றில் ஒரு நாள் பயணம், அழகிய பொல்கொட ஏரியில் ஜெட் ஸ்கை சபாரி சாகசங்கள் உள்ளிட்ட பரிசுகள் இதில் உள்ளடங்குகின்றன.

இந்த திட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த பெஷன் பக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷபீர் சுபியான், “நாம் மேற்கொள்ளும் அனைத்து விடயங்களும் எமது வாடிக்கையாளர்களை மையப்படுத்தியதாகவே அமையும். ‘Fashion Bug Rewards Getaway’ திட்டமானது, நீண்ட காலமாக எமக்கு ஆதரவளித்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். அவர்கள் எம் மீது வைத்துள்ள விசுவாசத்தைக் கொண்டாடுவது எமது மதிப்புக்கு, மிகவும் அவசியமான ஒன்றாகும். இது ஷொப்பிங் செய்வதனை ஒரு உண்மையான வாழ்க்கை முறை அனுபவமாக மாற்றும் அதே வேளையில், எமது ஆதரவை அவர்களுக்கு வழங்குவதற்கான நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் இது அவர்களுக்கு எடுத்துக் காட்டுகிறது.” என்றார்.

இந்த பிரத்தியேக வெகுமதிகளை அனுபவிக்கும் வாய்ப்பை பெற்ற வெற்றியாளர்கள் தங்களது நன்றிகளைத் தெரிவித்ததோடு, அவை தமது எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாகவும், தங்களது குடும்பத்தினருடன் மறக்கமுடியாத நினைவுகளை உருவாக்கியதாகவும் தெரிவித்திருந்தனர். வெற்றியாளர்களைத் தெரிவு செய்யும் செயன்முறையானது, முழுமையான நம்பகத்தன்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும் வகையில், மேல் மாகாண வருவாய் திணைக்களத்தின் சிரேஷ்ட வருவாய் அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் கலாநிதி எஸ்.எச்.எம். பராஸ் கருத்து வெளியிடுகையில், “பெஷன் பக், அதன் Retail வணிகத்திற்கு அப்பால், தமது வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள அனுபவங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது. எமது வர்த்தகநாமம் தற்போதுள்ள நிலைக்கு காரணமானவர்களைக் கொண்டாடும் முயற்சிகளில் நாம் ஏன் தொடர்ச்சியாக புத்தாக்கமான விடயங்களையும் வாடிக்கையாளர் ஈடுபாட்டுடனான விடயங்களையும் மேற்கொள்கிறோம் என்பதை, வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியும் உற்சாகமும் பொங்குவதை காணும் போது அறிந்து கொள்ளலாம்.” என்றார்.

1994 ஆம் ஆண்டில் வெறுமனே ஏழு பேர் கொண்ட ஒரு குழு மூலம் நிறுவப்பட்ட பெஷன் பக், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட ஒரு முன்னணி பெஷன் Retail வணிக நிறுவனமாக இன்று உருவெடுத்துள்ளது. உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட, தயாரிக்கப்பட்ட ஆடை அணிகலன்களை காட்சிப்படுத்தும் இந்நிறுவனம், உலகளாவிய போக்குகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் இலங்கையின் ஒரு உயர் ரக பெஷன் வணிக நிறுவனமாக இருப்பதில் பெருமை கொள்கிறது. அத்துடன், எதிர்காலத்தில் தொடர்ச்சியாக வரவுள்ள வெகுமதிகள், அனுபவங்கள் பற்றிய தகவல்களை, Fashion Bug சமூக ஊடக பக்கங்களுடன் பின்தொடர்வதன் மூலம் தெரிந்து கொள்வதோடு, தொடர்ச்சியாக அதில் இணைந்து தம்முடன் இணைந்திருக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு இவ்வர்த்தகநாமம் அழைப்பு விடுக்கிறது.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading