வெலிக்கடை சிறைச்சாலையில் 06 பேருக்கு கொரோனா!

வெலிக்கடை சிறைச்சாலையில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதில் ஐந்து கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் அடங்குவர்.
சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருந்தாளருக்கு (Pharmacist) நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில் தொடர்ந்து அதிகாரிகள் கைதிகளிடையே PCR பரிசோதனைகளை நடத்தியுள்ளனர்.
இந்த சோதனை செய்யப்பட்டதில் ஐந்து கைதிகளுக்கு தொற்று அறியப்பட்டுள்ளது.
இவர்கள் பெண் கைதிகள் என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகிறது.
