Local

கடலில் மூழ்கி உயிர் துறப்பதைக்காட்டிலும் சுகாதார அமைச்சர் பதவி துறப்பது மேலானது!

கடலில் மூழ்கி உயிர் துறப்பதைக்காட்டிலும் சுகாதார அமைச்சர் பதவி துறப்பது மேலானது. எனவே, கடலில் குதிக்க துணிந்த அவர், நாட்டுக்காக பதவி துறக்கவேண்டும்.” – என்று  என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் சவால் விடுத்துள்ளார்.
தான் கடலில் மூழ்கி பலியானால் கொரோனா வைரஸ் ஒழியுமெனில் அதனை செய்வதற்கும் தயாரென சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தோல்வி கண்டுள்ளது. நிலைமை இப்படி இருக்கையில் நகைச்சுவைத்தனமான அறிவிப்புகளை சுகாதார அமைச்சர் விடுக்கின்றார். அவர் கடலில் மூழ்கவேண்டிய தேவையில்லை, பதவி விலகி சிறப்பாக செயற்படக்கூடிய ஒருவருக்கு அந்த பதவியை வழங்கினாலே அது பெரும் உதவியாக இருக்கும்.

கடலில் மூழ்குவதாக சுகாதார அமைச்சர் கூறிய பின்னர் , இலங்கை கடற்பரப்பில் திமிங்கிலங்கள் கரையொதுங்குவதை காணமுடிகின்றது. எனவே, அவர் கடலில் மூழ்கவேண்டியதில்லை, நாடுமீது அக்கறை இருந்தால் பதவி துறக்கவேண்டும். அதனை அவர் செய்வாரா’” – என்றும் முஜிபூர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading