Local

வெலே சுதாவுக்கு மரண தண்டனை: மேன்முறையீட்டிலும் உறுதியானது தீர்ப்பு!

பிரபல போதைப் பொருள் வர்த்தகரான வெலே சுதாவுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் வழங்கியிருந்த மரண தண்டனைத் தீர்ப்பு சரியானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (05) தீர்ப்பு வழங்கியுள்ளது.

உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்புக்கு எதிராக வெலே சுதா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீதே இன்று இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழுவின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இத்தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு 7.05 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட வெலே சுதாவுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading