Features

வெள்ளித் தட்டில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நீண்ட ஆயுளைப் பெறலாம். குறிப்பாக வெள்ளித் தட்டில் உணவை வைத்து குழந்தைகளுக்கு ஊட்டினால் அது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மேலும் வெள்ளி கரண்டி கொண்டு சாப்பிட்டால் அது உணவை சத்தாக மாற்றுவதோடு பலவிதமான நோய்களையும் தடுக்கிறது.

  • நாம் வெள்ளித் தட்டில் சாப்பிடுவதால் ஏராளமான பெறலாம். இது குறித்து முழுமையாக பார்க்கலாம்.
  • வெள்ளிப் பாத்திரங்கள் உணவிலுள்ள கிருமிகளை அழிக்கிறது. வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் அது உணவு விரைவாக செரிமானம் அடைவதற்கு உதவி செய்கிறது.
  • நமது உடலுக்குள் செல்லும் உணவை எரிக்கும் சக்தியையும் அதிகரிக்கிறது.
  • வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் அது உடலில் உள்ள நிலையற்ற அணுக்களுடன் போரிட்டு நமது உடலில் உள்ள செல்களுக்கு புத்துணர்வைத் தருகிறது.
  • அதோடு பாதிப்படைந்த உடல் செல்களையும் மீண்டும் தூண்டி எழுப்பி நன்றாக இயங்க வைக்கிறது.
  • நோய்த் தொற்று ஏற்படாமல் தடுப்பதோடு, ஆபத்தான நோய்கள் ஏற்படுவதையும் குறைக்கிறது.
  • உடலில் உள்ள காயங்களை விரைவில் குணப்படுத்தும் ஆற்றல் வெள்ளிக்கு உண்டு.
  • வெள்ளித் தட்டில் சாப்பிடும் போது அது தீய பாக்டீரியாக்களிடமிருந்து நம்மை பாதுகாப்பதோடு, நமது நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துவிடாமல் பாதுகாக்கிறது.
  • மேலும் பலவிதமான நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது. அதே நேரத்தில் நமது உடலுக்குத் தேவையான பலவிதமான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றது.
வெள்ளிப் பாத்திரங்களில் ஏன் உணவைப் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்?

உணவில் உள்ள பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் நச்சுக் கிருமிகளை வெள்ளி அழிக்கக்கூடியவை.

பழைய காலத்தில் பால் நீண்ட நேரம் கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதில் வெள்ளி நாணயங்களை பாலில் இட்டு வைப்பார்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading