Local

வேகமாக பரவும் புதிய டெல்டா வகை தொற்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா தொற்றில் இருந்து தற்போது புதிதாக உருவெடுத்துள்ள ஏஒய்.4.2 தொற்றானது 42 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், ஏஒய்.4.2 தொற்றின் வீரியம் குறித்து அறிய தொடர் ஆய்வக சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வைரஸிலிருந்து பிரிந்து புதிதாக உருவெடுத்துள்ள ஏஒய்.4.2 வைரஸ் தற்போது 42 நாடுகளில் கண்டெறியப்பட்டுள்ளது.

இதில் 93% தொற்று பிரித்தானியாவில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா வைரஸிலிருந்து பிரிந்து உருவான மற்ற 20 வைரஸ்கள் குறித்தும் ஆய்வு செய்து வருவதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மட்டுமின்றி, இதனால் கடந்த வாரத்தில் மட்டும் 4% கொரோனா தொற்று உலக அளவில் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஏஒய்.4.2 வைரஸ் பிரித்தானியாவில் கடந்த ஜூலை மாதம் முதன்முதலில் கண்டறியப்பட்டது.

அதனையடுத்து படிப்படியாக பிரித்தானியாவில் பரவல் அதிகரித்து, இதன் தாக்கம் பல்வேறு நாடுகளிலும் கண்டறியத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து ஏஒய்.4.2 தொற்று குறித்து தீவிரமாக பிரித்தானிய மருத்துவ நிபுணர்கள் ஆய்வுகள் முன்னெடுத்து வருவதாக தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading