ஷிராந்திக்கு அவசர இதய அறுவை சிகிச்சை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவுக்கு, கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவசர இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, அடுத்த சில வாரங்களுக்கு அவர் முழுமையான படுக்கை ஓய்வில் இருக்க வேண்டும் என்று சிறப்பு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இதனிடையே கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு அத்தியாவசியமான சி.டி. ஸ்கான் இயந்திரத்தை வாங்குவதற்காக தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து ரூ. 10 மில்லியனைப் பெற்றுக்கொண்டு, சீன அரசாங்கத்திடமிருந்து நாட்டிற்குப் பெறப்பட்ட ஒரு இயந்திரத்தை மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) ஒரு விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

‘சிரிலியா’ கணக்கில் நடந்ததாகக் கூறப்படும் இந்த நிதி முறைகேடு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன் அவர் அழைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.