Gossip

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்த ரௌடி பேபி கைது !

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்ததாக ரௌடி பேபி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாநகரில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

இதையடுத்து, காவல் ஆணையர் லோகநாதன் அவர்களின் உத்தரவின் பெயரில் திருச்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்வேறு பியூட்டி பாக்களில் விபச்சார தடுப்பு தனிப்படை போலீசார் திடீர் சோதனை நடத்தி உள்ளார்கள்.

இந்த சோதனையின் போது டிக் டாக் புகழ் சூர்யா உட்பட 10 க்கும் மேற்பட்டவர்களை பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்து உள்ளனர்.

அங்கிருந்த 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு , காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதில், டிக் டாக் வீடியோ புகழ் சூர்யா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிடிபட்ட டிக் டாக் சூர்யா தான் பாலியல் தொழிலில் ஈடுபடவில்லை. இந்த மையத்திற்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்று மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனாலும், போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading