Up Country

ஹட்டனில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்தது கோழி லொறி – சாரதி படுகாயம்!

ஹட்டன், பொகவந்தலா பிரதான வீதியில் –  கிளங்கன் பகுதியில் வைத்து லொறியொன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கண்டியிலிருந்து பொகவந்தலாவிற்கு கோழி ஏற்றிச்சென்ற லொறியே நேற்றிரவு 10 மணியளவில் பாதையை விட்டுவிலகி இவ்வாறு விபத்துக்குள்ளானதாக நோர்வூட்  பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியில் சாரதி உட்பட இருவர் பயணித்த போதிலும் சாரதிக்கே படுகாயம் ஏற்பட்டு, அவர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகிறார். அதிக வேகமே விபத்துக்கான காரணமென்றும் பொலிஸார் தெரிவித்தனர் .
நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்  எம் கிருஸ்ணா

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading