Lead NewsLocal

புத்தாண்டிலும் ஆயுததாரிகளின் வெறியாட்டம் தொடர்கின்றது….! – களுத்துறையில் ஒருவர் படுகாயம்

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காலி வீதி, தொட்டுபல சந்திக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு 10.35 மணியளவில் கார் ஒன்றில் வந்த இருவரால் ஹோட்டல் ஒன்றுக்கு எதிரில் உள்ள வீதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் நாகொட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக காணப்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading