Local

ஹரீன் மற்றும் மனுஷ தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை நடத்துவதற்கு தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு எதிராக அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா, மனு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

மனு தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் குறித்த மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் நிறைவு செய்ய வேண்டும் என பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, குறித்த மனுக்களை நீதிமன்றம் நிர்ணயித்தபடி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்த நீதியரசர் குழு மனு மீதான விசாரணையை திட்டமிட்டபடி நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading