Local

ஹவுத்தி போராளிகளுக்கு எதிராக இலங்கை கடற்படை கப்பல்!

 

ஹவுத்தி போராளிகளுக்கு எதிராக இலங்கை கடற்படையின் கப்பலை செங்கடல் பகுதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் நடைபெற்ற “ஷில்பா அபிமானி 2023” ஜனாதிபதி கைவினைப் பொருட்கள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த திரு.ரணில் விக்கிரமசிங்க,

“.. உக்ரைனில் போர், காஸாவில் அடுத்தபடியாக போர், ஆதலால் பொருட்களின் விலை இன்னும் அதிகரிக்கலாம். தற்போது செங்கடலில் உள்ள கப்பல்களுக்கு ஹூதி குழு ஏவுகணைகளை அனுப்புவதால் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பல்கள் செங்கடல் ஊடாக பயணிக்காது தென்னாபிரிக்கா ஊடாக பயணித்து வருமானால் பொருட்களின் விலை அதிகரிக்கும். அதனால் ஹவுதி திட்டத்திற்கு எதிராக நாமும் உடன்பட்டுள்ளோம். அவர்களை பாதுகாக்க இலங்கை கடற்படையில் இருந்து செங்கடலுக்கு கப்பல் ஒன்றினை அனுப்ப தீர்மானித்துள்ளோம்.. அப்படி ஒரு கப்பல் அனுப்பப்படும் போது , இரண்டு வாரங்கள் அங்கு தங்குவதற்கு 250 மில்லியன் ரூபாய் செலவாகும். நாங்கள் கடினமான இடத்தில் இருக்கிறோம். அதைப் பாதுகாக்க வேண்டும்..”

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading