World

ஹோர்முஸ் நீரிணையில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க ட்ரோன்

ஹோர்முஸ் நீரிணைக்கு மேலாகப் பறந்த அமெரிக்காவின் MQ-1 மற்றும் MQ-9 ரக ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும், பஹ்ரைனிலுள்ள அமெரிக்காவின் வான் பாதுகாப்பு ரேடார் கட்டமைப்புகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகவும் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளது.

ஈரானின் வான்பரப்பிற்குள் அமெரிக்க ட்ரோன்கள் தொடர்ச்சியாக அத்துமீறி நுழைவதற்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க ட்ரோன் | Us Drone Shot Down In The Strait Of Hormuz

எனினும் ஈரானின் இந்தக் கூற்றுகள் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை. பஹ்ரைனை நோக்கி வந்த ஈரானிய ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும், தங்களுக்கு எவ்வித சேதமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என்றும் அமெரிக்க மத்திய கட்டளைப் பீடம் (CENTCOM) தெரிவித்துள்ளது.

அமெரிக்கக் கடற்படையின் 5-வது பிரிவின் தலைமையகம் பஹ்ரைனில் அமைந்துள்ளதாலும், உலகின் எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையாக ஹோர்முஸ் நீரிணை விளங்குவதாலும் இச்சம்பவம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading