Local

10 வருடங்களுக்குப் பின்னர் ரயில் கட்டணம் அதிகரிப்பு!

ரயில் கட்டணங்கள் நாளை திங்கட்கிழமை (01) முதல் 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

10 வருடங்களுக்குப் பின்னரே ரணில் கட்டணங்களில் இவ்வாறு திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி குறைந்தபட்ட கட்டணத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.

மூன்றாம் வகுப்புக்கான குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாவாகவும், இரண்டாம் வகுப்புக்கான குறைந்தபட்ச கட்டணமாக 40 ரூபாவும் தற்போது அமுலில் இருக்கின்றது. இத்தொகையிலேயே எதுவித மாற்றமும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரயில் பருவச்சீட்டு கட்டணமும் திருத்தப்படவுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading