World

100 கோடிக்கு படிக்கட்டு கல்லா? அமெரிக்காவின் அதிசயம்!

அமெரிக்காவின், மெக்சிகன் மாகாணத்தை சேர்ந்தவர், டேவிட் மசுரேஸ். இவரது வீட்டின் படிக்கட்டு அருகே, பல ஆண்டுகளாக, வித்தியாசமான தோற்றத்துடன் ஒரு கல் கிடந்தது. சாதாரண கல்லாக இருந்தாலும், வித்தியாசமான தோற்றத்துடன் இருந்ததால், அதை பாதுகாத்து வந்தார்.


சமீபத்தில், அந்த கல்லை, புவியியல் துறையைச் சேர்ந்த, பெண் பேராசிரியர் ஒருவரிடம் எடுத்துச் சென்றார். அதை ஆய்வு செய்த, அந்த பேராசிரியர், அது, வானிலிருந்து, 88 ஆண்டுகளுக்கு முன் விழுந்த விண்கல் என்றும், அதை, 100 கோடி ரூபாய் வரை விற்கலாம் என்றும் ஆச்சரிய தகவலை தெரிவித்தார்.


இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன டேவிட், அந்த கல்லை, அமெரிக்காவின் பிரபலமான ஆய்வு நிறுவனத்திடம் கொடுத்து, விற்றுத் தரும்படி கூறியுள்ளார். டேவிட்டின் அக்கம் பக்கத்து வீட்டினரோ, ‘படிக்கட்டு அருகே, கேட்பாரற்று கிடந்த கல்லின் விலை, 100 கோடி ரூபாயா…’ என, வயிற்றெரிச்சலுடன் புலம்புகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading