Lead NewsLocal

கடந்த 42 நாட்களில் மட்டும் 1, 310 கிலோ போதைப்பொருளுடன் 10,368 பேர் கைது!

இலங்கையில் இவ்வருடத்தின் கடந்த 42 நாட்களில் மாத்திரம் போதைப்பொருட்களுடன் 10 ஆயிரத்து 368 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 1, 310 கிலோ கிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் பலர் பாதாள உலகக் கோஷ்டியுடன் தொடர்புபட்டவர்கள் எனப் பொலிஸார் கூறியுள்ளனர்.

இவ்வாறு கைதான சந்தேகநபர்களில் 9 பேர் வௌிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading