World

ஈரானின் வான்வழி தாக்குதல்களால் மீண்டும் உச்சக்கட்ட பதற்றம்!

பாரசீக வளைகுடா பகுதியில் இன்று (09) காலை பல நாடுகளின் மீது நடத்தப்பட்ட பாரிய வான்வழித்தாக்குதல்களால் மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

ஈரான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் பஹ்ரைன் உட்பட பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

காயமடைந்தவர்களில் நிலைமை

பஹ்ரைனின் சித்ரா (Sitra) பகுதியில் ஈரான் நடத்திய ஆளில்லா வானூர்தி தாக்குதலில் 32 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானின் வான்வழி தாக்குதல்களால் மீண்டும் உச்சக்கட்ட பதற்றம்! நடுவானில் சுட்டு வீழ்த்தப்படும் ட்ரோன்கள் | Iran Drone Attack On Bahrain

இவ்வாறு காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதோடு அதில் அறுவை சிகிச்சை தேவைப்படும் சிறுவர்களும் அடங்குவர் என பஹ்ரைன் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எரிசக்தி உள்கட்டமைப்புக்கு அருகிலுள்ள பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

பெரும் பரபரப்பு

இப்பகுதியில் நிலவி வரும் இராணுவ மோதல்களுக்கு மத்தியில், பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் வான்வழி தாக்குதல்களால் மீண்டும் உச்சக்கட்ட பதற்றம்! நடுவானில் சுட்டு வீழ்த்தப்படும் ட்ரோன்கள் | Iran Drone Attack On Bahrain

இதேவேளை, அபுதாபியிலும் இன்று (09) காலை பல சத்தமான வெடிப்புகள் பதிவாகியுள்ளதுடன்,போர் தொடங்கியதிலிருந்து கேட்ட மிக அதிக சத்தம் இது என்று வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

இன்று (09) காலை பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைந்த ட்ரோன்களை குவைத் தேசிய பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் முக்கியமான இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading