World

114 சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இரையாக்கிய டாக்டர் கைது!

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 114 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இரையாக்கிய வைத்தியர் கைதுசெய்யப்பட்டார்.

கடந்த 2014ஆம் ஆண்டு இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, பெர்ன் நீதிமன்றத்தால் 13 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்க வலியுறுத்திய நீதிமன்றம், குறிப்பிட்ட அளவீடுகளை மீறினால், அந்த டாக்கரை கைதுசெய்யலாம் எனத் தீர்ப்பளித்திருந்தது.

இந்தநிலையில், கடந்த வாரம் அவரது நடவடிக்கை காரணமாக குறிப்பிட்ட வைத்தியரைக் கைதுசெய்ய நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.

தற்போது 62 வயதான குறிப்பிட்ட டாக்கர் மீது சுமார் 114 சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளது எனக் கூறும் நீதிமன்றம், மேலும் 33 வழக்குகள் அவரது பெயரில் சுமத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading