LocalNorth

118 கிலோ கிராம் கஞ்சாப் பொதி வல்வெட்டித்துறையில் சிக்கியது!

118 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதி ஒன்றை வல்வெட்டித்துறை கடற்கரையிலிருந்து கடற்படையினர் மீட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், அந்தப் பொதியை அந்தப் பகுதிக்கு எடுத்து வந்தவர்கள் யார் எனத் தெரியவில்லை எனப் பொலிஸார் கூறினர்.

கடற்படைக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய அந்தப்பகுதிக்கு நேற்றுச் சென்ற கடற்படையினர் கஞ்சாப் பொதியை மீட்டனர்.

மீட்கப்பட்ட கஞ்சாவைக் கடற்படையினர் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading