Local

எல்லை தாண்டிய 13 இந்திய மீனவரை கைதுசெய்தது இலங்கைக் கடற்படை!

எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து நேற்று கடலுக்கு மீன்பிடிக்க இரு படகுகளில் சென்ற மீனவர்கள் 9 பேர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கைதாகியுள்ளனர்.

இதுதவிர கச்சதீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த மேலும் 4 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 13 மீனவர்களும் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று இந்தியச் செய்திகள் கூறுகின்றன.

இதேவேளை, நேற்றுமுன்தினம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை மீனவர்கள் 25 பேரை இந்தியக் கடலோர காவல் படையினர் கைதுசெய்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading