Sports

14 ஆண்டுகளுக்குப் பின்னர் சாதனைப் படைத்த இலங்கை மகளிர் அணி!

2022 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் இரண்டாம் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. 14 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை அணிக்கு இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.

போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் அதிகபடியாக, ஹசிதா சமரவிக்ரம 35 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் மகளிர் அணியின் நஸ்ரா சந்து 4 ஓவர்கள் பந்துவீசி 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்தநிலையில், 123 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றுத் தோல்வியைத் தழுவியது.

அணி சார்பில் அதிகபடியாக பிஸ்மா மாரூப் 42 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இலங்கை மகளிர் அணியின் இனோகா ரணவீர 4 ஓவர்கள் பந்து வீசி 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதற்கமைய, 2022ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.

இன்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணியும் இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றது இதன்படி, இறுதிப் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதவுள்ளன.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின்போதுதான் இலங்கை மகளிர் அணி, கடைசியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது. அதன்பின்னர் இம்முறையே வாய்ப்பு கிட்டியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading