LocalUp Country

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களுடன் வந்த 15 இளைஞர்கள் கைது!

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்கள் கொண்டு வந்த 15 இளைஞர்கள் ஹட்டன் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைதுசெய்யபட்டுள்ளனர்

நேற்றிரவு இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

விசேட சுற்றிவளைப்பின்போது கேரளாக் கஞ்சா, ஹெரோயின் போன்ற போதைப்பொருட்கள் இவர்கள் வசம் இருந்துள்ளன.

கொழும்பு, மாத்தறை, காலி பகுதிகளைச் சேர்ந்த 20 தொடக்கம் 25 வயதுடைய இளைஞர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 15 பேரும் ஹட்டன் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என்று ஹட்டன் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading