160 வருடங்களாக சுத்தமான குடிநீர் இல்லாமல் மக்கள் தவிப்பு!

160 வருடங்கள் பழமையான தோட்டமொன்றில் வாழும் மக்கள் சுத்தமான குடிநீரின்றி அவதிப்படுகின்றனர். சுமார் 16 தசாப்தங்கள் கடந்தும் இம்மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை வேதனைக்குரிய விடயமாகும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
நுவரெலியா மாவட்டத்தில், மஸ்கெலியா பிரதேசசபைக்குட்பட்ட பகுதியிலேயே குடா மஸ்கெலியா கிராமம் அமைந்துள்ளது. 1,880 ஆம் ஆண்டு முதல் அங்கு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
