Local

மதுஷின் தோழர் வீட்டிலிருந்து 161 கிலோ ஹெரோயின் மீட்பு! – பிஸ்ரல் ஒன்றும் 5000 தோட்டாக்களும் சிக்கின; இருவர் கைது

மொரட்டுவ, ராவத்தாவத்தப் பகுதியில் 161 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மாக்கந்துர மதுஷின் சகாவான கெலுமாவின் வீட்டில் இருந்தே குறித்த ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் இருந்து கைத்துப்பாக்கி ஒன்றும், 5000 இற்கும் அதிகமான ரி – 56 ரக துப்பாக்கிக்கான தோட்டாக்களும், பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை ​மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading