Local

20 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் முட்டை…!!!

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளை முட்டை ஒன்று 25 ரூபாய்க்கும், சிறிய வெள்ளை முட்டை ஒன்று 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெளி மாவட்டங்களில் இருந்து சிறிய வண்டிகள் மூலம் கொண்டுவரப்பட்ட முட்டைகள், குறிப்பாக காரைதீவு, கல்முனை மாநகரப் பிரதேசங்கள் உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தின் முக்கிய சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

பொதுமக்கள் இந்த முட்டைகளை ஆர்வமுடன் வாங்கி வருவதை அவதானிக்க முடிகிறது.

எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் முட்டைகளை விற்பனை செய்வதாக முட்டை விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், சமீபத்தில் சந்தை நிலவரம் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் ஒருவரின் விருப்பத்தின் அடிப்படையில் முட்டைகளின் விலை குறைக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான கருத்து தொடர்பாக, மக்கள் மத்தியில் எதிர்மறையான கருத்துக்கள் நிலவுவதாக முட்டை விற்பனையாளர்கள் குறிப்பிட்டனர்.

இத்தகைய விடயங்களை ஊடகங்களில் வெளியிடுவதற்கு முன், சம்பந்தப்பட்ட தரப்பினரை அணுகி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading