Lead NewsLocal

2019 ஜனவரி 05 இல் பொதுத்தேர்தல்!

அரசமைப்பு சட்டத்தை மீறி எட்டாவது நாடாளுமன்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நள்ளிரவு (09.11.2018) கலைக்கப்பட்டுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது. இதன்படி 2019 ஜனவரி 05 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.

9ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் 2019 ஜனவரி 17ஆம் திகதி ஆரம்பமாகும்.

இம்மாதம் 19ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி நண்பகல் வரை வேட்புமனுவைத் தாக்கல் செய்யமுடியும்.

எட்டாவது நாடாளுமன்றம் – ஒரு பார்வை

வேட்பு மனுத் தாக்கல் முதல் கலைப்புவரை

வேட்புமனுத் தாக்கல் – 06 ஜுலை 2015 – 13 ஜுலை 2015.
(வர்த்தமானி இல. 1920/38 , 26.06.2015 திகதியிடப்பட்டது.)

பொதுத் தேர்தல் 17 ஆகஸ்ட் 2015
(வர்த்தமானி இல. 1920/38 , 26.06.2015 திகதியிடப்பட்டது.)

ஐக்கிய தேசியக் கட்சி 93+13 = 106 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 83 +12 = 95 ஆசனங்கள்
இலங்கை தமிழரசுக் கட்சி – 14+2 = 16 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி 4+2 = 06 ஆசனங்கள்
ஈ.பி.டி.பி. – ஒரு ஆசனம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – ஒரு ஆசனம்

தேர்தலின் பின்னர் நாடாளுமன்றம் முதலாவதாக
கூடிய திகதி 01 செப்டெம்பர் 2015
(வர்த்தமானி இல. 1929/13, 26.08.2015 திகதியிடப்பட்டது)

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading