Technology

2030க்குள் காணாமல் போகவுள்ள ஸ்மார்ட் போன்கள்!

மொபைலைக் கண்டுபிடிக்க மனிதனுக்கு பல வருடங்கள் ஆனது. ஆனால் மொபைலில் இருந்து ஸ்மார்ட்போன் வரையிலான பயணம் மிகக் குறுகிய காலத்தில் முடிந்துவிட்டது. இந்த நிலையில் 5ஜி நெட்வெர்க்கைத் தொடர்ந்து 2030 ஆம் ஆண்டிற்குள் 6ஜி சேவை அமலில் இருக்கும் என நோக்கியா தலைமை செயல் அலுவலர் பேக்கா கூறியுள்ளார்

கடந்த சில ஆண்டுகளாக தொழில்நுட்பம் வேகமாக மாறிவருகிறது. இந்த கேஜெட்டுகளில் சில காலப்போக்கில் பின்தங்கிவிட்டன. அதன்படி, ஸ்மார்ட்போன்களின் பயன்பாடும் நின்றுவிடலாம். இந்த சகாப்தமும் முடிவுக்கு வரலாம் என்று அவர் கூறியுள்ளார்.

நோக்கியா தலைமை நிர்வாக அலுவலரின் கணிப்பு கருத்துப்படி, 6ஜி தொழில்நுட்பம் 2030க்குள் கிடைக்கும். ஆனால் அதுவரை இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு ஸ்மார்ட்போன்களில் ‘பொதுவான இண்டர்பேஸ்’ இருக்காது” என்று டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் அவர் பேசினார்.

2030க்குள் 6ஜி வணிக ரீதியாக கிடைக்கும் என்கிறார். ஆனால் அதற்கு முன், மக்கள் ஸ்மார்ட்போன்களுக்கு பதிலாக ஸ்மார்ட் கண்ணாடி மற்றும் பிற கேட்ஜெட்டுகளை விரும்புவார்கள். இதன் காரணமாக, நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள்  அதிகம் பயன்படுத்தப்படாது. பல அணியக்கூடிய பொருள்கள் உங்கள் உடலில் நேரடியாக நிறுவப்படும். இவ்வாறு தனது கருத்தை நோக்கியா சிஇஓ பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading