Gossip

25 வயது மருமகனை காதலித்து திருமணம் செய்த 50 வயது மாமியார் கைது!

மருமகனை காதலித்து திருமணம் செய்துகொண்ட மாமியார் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவர், தன்னுடைய 25 வயது மருமகனை காதலித்து வந்துள்ளார். 2 பேரக் குழந்தைகளுக்கு பாட்டி ஆவார்.

தன்னை விட பாதி வயதுள்ள மருமகனை காதலித்தது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காதல் ஜோடிகள் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி வாடகை வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று வீடு திரும்பினர். தாங்கள் பதிவு திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழ்ந்து வருவதாக கூறி இருக்கின்றனர்.

இதனை ஏற்றுக்கொள்ளாத குடும்பத்தினர், அவர்களிடம் சண்டை போட்டுள்ளனர். பின்னர், ஊர்க்காரர்களும் அவர்களது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். இந்த திருமணத்தை ஏற்க முடியாது என போலீசார் தெரிவித்துவிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, பொது ஒழுக்கத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடும் என்ற பிரிவில் அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மாமியாரையும் மருமகனையும் போலீசார் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading