Local

நிழல் உலக தாதா மாகந்துர மதூஷ் உள்ளிட்ட 25 பேர் டுபாயில் கைது!

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரரும்,  பாதாள உலகக் கோஷ்டித் தலைவருமான மாகந்துரே மதூஷ் உட்பட  25 பேர் டுபாயிலுள்ள  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் போதைப்பொருள் கடத்தல்காரர்கள்  என்றும், அவர்களில் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கஞ்சி பானை இம்றான், கெசல்வத்தே தினுக்க உள்ளிட்டவர்களும் இதில் அடங்குகின்றனர்.

டுபாயிலுள்ள பிரபல ஹோட்டலொன்றில் வைத்தே, சட்டவிரோத போதைப்பொருட்களுடன் இவர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

டுபாய் மற்றும் இலங்கை பொலிஸாரின் கூட்டு நடவடிக்கையாகவே இக்கைது இடம்பெற்றுள்ளது. மாகந்துரே மதூஷால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘பார்ட்டி’ யில் பங்கேற்றவர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் பிரபல பாடகரும் இவர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

இலங்கையில் தெற்கில் இடம்பெற்ற பாதள செயற்பாடுகளுக்கு கட்டளை இடும் தளபதியாக மாகந்துரே மதூஷ் செயற்பட்டார்.

வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்தே குற்றச்செயல்களை வழிநடத்தினார். அவரை கைதுசெய்வதற்கு சர்வதேசப் பொலிஸாரின் உதவியை, இலங்கை பொலிஸார் நாடியிருந்தனர்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading