LocalNorth

படகில் கனடா செல்ல முயற்சித்த 26 பேர் எஸ்.ரி.எவ்விடம் சிக்கினர்!

கிளிநொச்சியிலிருந்து சட்டவிரோதமாகக் கடல் வழியாக கனடா செல்ல முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் 26 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்று விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

26 பேரைக் கைதுசெய்துள்ள விசேட அதிரடிப் படையினர், அவர்களை நேற்றுப் பிற்பகல் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். எனினும், சந்தேகநபர்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படாததால் விவரங்களைக் கூற முடியாது எனப் பொலிஸார் கூறினர்.

கிளிநொச்சி கனகபுரத்தில் வைத்து 26 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் பணத்தைப் பெற்றுவிட்டு கடத்தல்காரர்களே விசேட அதிரடிப் படையினருக்குத் தகவல் வழங்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading