World

360 இந்திய கைதிகளை விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு!

சிறையில் உள்ள 360 இந்திய கைதிகளை விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தண்டனைக் காலம் முடிந்த பிறகும் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 10 கைதிகள், 385 மீனவர்கள் உட்பட 400க்கும் மேற்பட்ட கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடந்த 3ஆம் திகதி வலியுறுத்தியது.
இந்நிலையில் பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கைதிகளை விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாகவும்,
தண்டனை காலம் முடிந்த இந்திய கைதிகள் 360 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுப்விப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறையில் உள்ள 360 கைதிகள் வரும் திங்கட் கிழமை அல்லது அடுத்தநாள்  தாயகம் வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading