Local

ஓட்டோ மீது மரம் முறிந்து விழுந்து 3 பெண்கள் சாவு!

சூரியவெவ, கந்தவுர பிரதேசத்தில் ஓட்டோ மீது மரம் முறிந்து விழுந்ததில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

31 வயதுடைய தாய், அவருடைய மகள் மற்றும் இன்னுமொரு சிறுமி ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஓட்டோ மீது மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது எனச் சூரியவெவப் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரும் சூரியவெவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading