Cinema

30 வருடங்களுக்கு பிறகு காக்கி சட்டையில் களமிறங்கும் ரஜினி!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு தர்பார் என தலைப்பிட்டுள்ளனர். படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தர்பார் படத்தின் ‘ஷூட்டிங்’ நாளை (10) மும்பையில் ஆரம்பமாகின்றது.

இந்த படத்தில் ரஜினி பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார். கடைசியாக பாரதிராஜா இயக்கத்தில் கொடி பறக்குது படத்தில் ரஜினி பொலிஸ்  அதிகாரியாக நடித்திருந்தார்.

அந்த படம் 1988இல் வெளியானது. 30 வருடம் கழித்து மீண்டும் இப்போது அவர் பொலிஸ் வேடத்தில் நடிக்கிறார்.

படத்திற்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் ரஜினி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படம் 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading